உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளந்திரி ஐயப்பன் கோயிலில் கும்பாபிஷேகம்

கள்ளந்திரி ஐயப்பன் கோயிலில் கும்பாபிஷேகம்

மதுரை: மதுரை கள்ளந்திரியில் அகில பாரத ஐயப்ப சேவா சங்க ஐயப்பன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி அதிகாலை அனுக்கை விக்னேஸ்வர பூஜை, பஞ்சகாவ்யம், ஆறாம் கால யாக வேள்வி மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. காலை 6:00 மணிக்கு சிவாச்சார்யார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். மாலை சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. மீனாட்சி அம்மன் கோயில் பட்டர் சண்முகசுந்தரம் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !