அமிர்தகடேஸ்வரர் கோவில் குடமுழுக்கு கோலாகலம்
நாமக்கல்: புதுச்சத்திரம் ஒன்றியம், பாப்பிநாயக்கன்பட்டி ஊராட்சி, கருங்கல்பாளையம் கரையாம்புதூர் கருமலை தண்டாயுதபாணி கோவிலில், அபிராமி அம்பாள் சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி, கணபதி ?ஹாமத்துடன் பூஜைகள் தொடங்கின. காவிரி ஆற்றிலிருந்து, திருப்பணி குழு தலைவர் நல்லதம்பி தலைமையில், ஏராளமான பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். அனைத்து சுவாமிகளுக்கும் கும்பத்தில் ஆலாகணம் செய்தல், யாகசாலை பிரவேசம், வேதிகார்ச்சனை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தன. மேலும், இரண்டாம் கால யாக வேள்வி பூஜை, கோபுர கலசம் வைத்து கண் திறத்தல், அதிர்ஷ்ட லட்சுமி பூஜை, முக்கன் நாயகனுக்கு மூன்றாம் கால யாக வேள்வி பூஜை நடந்தது. தொடர்ந்து, அபிராமி அம்பாள் சமேத அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக, சிவாச்சாரியார்கள் யாகசாலையில் இருந்து புனிதநீரை எடுத்துச் சென்று, கலசத்தில் ஊற்றினர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.