உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலக அமைதி வேண்டி திருப்பதிக்கு சைக்கிள் பயணம்

உலக அமைதி வேண்டி திருப்பதிக்கு சைக்கிள் பயணம்

மகுடஞ்சாவடி: தாரமங்கலம் பகுதியை சேர்ந்த குழுவினர், உலக அமைதி வேண்டி, சைக்கிளில் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு புறப்பட்டனர். தாரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த, திருப்பதி திருமலை சைக்கிள் பயண நண்பர்கள் குழுவினர் கடந்த, 26 ஆண்டுகளாக உலக நன்மை வேண்டி விரதம் இருந்து, தாரமங்கலத்தில் இருந்து திருப்பதி வரை, சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று மதியம், 1:00 மணியளவில் இந்த அமைப்பை சேர்ந்த, 10 பேர் தாரமங்கலம் பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள நடைவிநாயகர் கோவிலில் இருந்து, சைக்கிளில் புறப்பட்டு சென்றனர். குழு ஒருங்கிணைப்பாளர் சங்கர் கூறியதாவது: அனைத்து நாடுகளிலும், தீவிரவாதம் முற்றிலும் அழிய வேண்டியும், பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அழியாமல் பாதுகாக்க வலியுறுத்தியும், ஆண்டவனிடம் வழிபடுகிறோம். இதற்காக விரதம் இருந்து, சைக்கிளில் இரண்டு நாட்கள் பயணம் செய்து, திருப்பதி சென்றடைகிறோம். வழி செலவு மற்றும் உணவிற்கு, ஊர்மக்கள் பணம் கொடுத்து ஊக்குவிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !