ஆண்டவன் கட்டளை
ADDED :2698 days ago
ஒரு ஆலயத்தில் பணக்காரர்களும், அதிகாரிகளும் உறுப்பினர்களாக இருந்தனர். அங்கு சென்ற ஏழை வாலிபன் தன்னையும் உறுப்பினராக்க வேண்டுமென விண்ணப்பம் கொடுத்தான். அவனது ஏழ்மையைப் பார்த்து சேர்க்க மறுத்த போதகர், “இங்கே சேர கர்த்தரின் அனுக்கிரகம் வேண்டும். நீ அதற்காக ஜெபம் செய்து வா” என்றார். ஒரு வாரம் கழிந்து அவன் வந்தான் “தாங்கள் சொன்னது போல் தொடர்ந்து ஜெபம் செய்தேன். அப்போது ஆண்டவர் எனக்கு என்ன கட்டளையிட்டார் தெரியுமா? ‘நானே அந்த ஆலயத்திற்குள் இல்லை. அதற்குள் புக நீ ஏன் விரும்புகிறாய்?’ என்றார். அவர் இல்லாத ஆலயத்தில், நான் உறுப்பினராகி என்ன செய்யப் போகிறேன். என் விண்ணப்பத்தைத் திரும்பத் தந்து விடுங்கள் என்றான். ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் ஆண்டவரின் அரசாங்கத்தில் இல்லை.