உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் நடராஜர் கோவிலில் மத்திய அமைச்சர் தரிசனம்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் மத்திய அமைச்சர் தரிசனம்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் மத்திய நிலக்கரித்துறை இணை அமைச்சர் ஹரிபாய் பிரதிப்பாய்சவுத்ரி சாமி தரிசனம் செய்தார். நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கு ஆய்விற்கு வந்த நிலக்கரித்துறை அமைச்சருடன் எம்.பி., குழு 17 பேர் வந்து ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை 11.00 மணியளவில் சிதம்பரத்திற்கு வருகை தந்த எம்.பி., க்களில் நிலக்கரித்துறை மத்திய இணை அமைச்சர் ஹரிபாய் பிரதிப்பாய்சவுத்ரி,  சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி., சாயாவர்மா, உள்ளிட்ட நான்கு  எம்.பி., க்கள்  நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !