பண்ருட்டி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் மகா சம்ப்ரோஷணம்
பண்ருட்டி: பண்ருட்டி அருள்ஜோதி நகர் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் மகா சம்ப்ரோஷணத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பண்ருட்டி அருள்ஜோதி நகர் பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோவில் மகா சம்ப்ரோஷணம் நேற்று நடந்தது. விழாவையொட்டி கடந்த 3ம் தேதி மாலை 4:30 மணிக்கு அனுக்ஞை, சங்கல்பம், ஆசார்ய வர்ணம், விஷ்வக்சேன ஆராதனை, வாஸ்து சாந்தி, விஷ்வக்சேன ேஹாமம், மகாபூர்ணாஹூதி பிரபந்த சேவாகாலம், சாற்றுமுறை நடந்தது. நேற்று முன்தினம் காலை புண்யாக வாகனம், மிருத்சங்கிரணம், அங்குரார்ப்பணம், துவாரபூஜை, அக்னி பிரதிஷ்டை, ேஹாமங்கள், மகாபூர்ணாஹூதி, இரவு 7:00 மணிக்கு உபன்யாசம் நடந்தது.
நேற்று காலை 5:30 மணிக்கு சுப்ரபாதம், கோபூஜை, துவாரபூஜை, ேஹாமங்கள், நாடிசந்தானம், மகாபூர்ணாஹூதி, காலை 9:00 மணிக்கு யாத்ராதானம் கடம்புறப்பாடு, காலை 9;30 மணிக்கு விமான கலச சம்ரோக்ஷணம், இரவு 7:00 மணிக்கு சீதாராமர் திருக்கல்யாண மகோற்சவம் நடந்தது. விழாவில் முன்னாள் நகர மன்றத் தலைவர் பன்னீர்செல்வம், செம்மேடு பாலபோதபவன் பள்ளி நிர்வாகி சந்தானம். எஸ்.வி.ஜூவல்லர்ஸ் வைரக்கண்ணு, அருள், ஏ.ஆர்.ஸ்டோர்ஸ் உரிமையாளர் அசோக்ராஜ், விழாக்குழு தலைவர் கோவிந்தராஜூலு, செயலர் உமேத்சந்த்லுங்கட், பொருளாளர் ராமமூர்த்தி, தொழிலதிபர்கள் விஜயரங்கன், விஜயகணபதி, ஆர்.சி.மகால் சந்திரசேகர், வைஷ்ணவி கலர் லேப் சுரேஷ்பாபு, முரளி ஆயில்மில் சுந்தர், மீனா ஜீவல்லர்ஸ் தேவராஜ், வள்ளிவிலாஸ் சரவணன், வி.எஸ்.பில்டர்ஸ் அருள்பிரகாஷ், குமாரசாமி கெமிக்கல்ஸ் கார்த்திக் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.