உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாய்பாபா கோவில் கும்பாபிஷேக விழா

சாய்பாபா கோவில் கும்பாபிஷேக விழா

பல்லடம்: கள்ளிப்பாளையத்தில், ஷீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.  பல்லடம் - தாராபுரம் ரோட்டில், ஷீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இரண்டாம் கால வேள்வி, யாக சாலை பூஜை, பிம்ப சுத்தி, யாத்ரா தானம், ஆகியவற்றை தொடர்ந்து, 9.50க்கு கோபுர கலசங்களுக்கு, புனித தீர்த்தங்கள் அபிேஷகம் செய்விக்கப்பட்டது. அதன்பின், ஷீரடி சாய்பாபாவுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. சாய் பக்தர்கள், பஜனை பாடல்களை பாடினர். விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !