உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிள்ளைவயல் காளியம்மன் பூச்சொரிதல் விழா துவக்கம்

பிள்ளைவயல் காளியம்மன் பூச்சொரிதல் விழா துவக்கம்

சிவகங்கை: சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

சிவகங்கையில்,பிரசித்தி பெற்ற பிள்ளைவயல் காளியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.  அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர். விழாவில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். எட்டாம் நாளில் பூச்சொரிதல் விழா நடைபெறும். பெண்கள், பூத்தட்டுகளை ஏந்தி, வலம் வந்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !