தேய்பிறை அஷ்டமி: ஏகாம்பரேஸ்வரர் கோவில் காலபைரவருக்கு வழிபாடு
ADDED :3018 days ago
நாமக்கல்: நாமக்கல், ஏகாம்பரேஸ்வரர் கோவில், அக்னி காலபைரவருக்கு, தேய்பிறை அஷ்டமி விழா சிறப்பாக கொண்டாப்பட்டது. நேற்று மாலை, 4:30 மணிக்கு மஞ்சள், குங்குமம், தேன், பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட நறுமண திரவியங்களால் சிறப்பு அபி ?ஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சுவாமிக்கு ஏலக்காய், திராட்சை, தேங்காய் மற்றும் அதிரச மாலைகள் அணிவிக்கப்பட்டன. அதேபோல், உற்சவருக்கும் அபி ?ஷகம் செய்யப்பட்டது. பின், சுவாமிக்கு சிறப்பு சந்தன அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. பக்தர்கள் திருவாசகம் பாடி, தேங்காய், எலுமிச்சை, பூசணி ஆகியவற்றில் நெய் தீபம் ஏற்றி, நேர்த்திக் கடன் செலுத்தினர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.