அவலுார்பேட்டையில் சங்கடஹர சதுர்த்தி
ADDED :3018 days ago
அவலுார்பேட்டை: அவலுார்பேட்டையில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மேல்மலையனுார் தாலுகா, அவலுார்பேட்டை ராமலிங்க சாமூண்டீஸ்வரி அம்மன் கோவிலில், சங்கட ஹரசதுர்த்தியை முன்னிட்டு விநாயக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.