திந்திரிணீஸ்வரர் கோவிலில் பைரவருக்கு அஷ்டமி பூஜை
ADDED :2694 days ago
திண்டிவனம்: திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவிலில் கால பைரவருக்கு, சிறப்பு பூஜைகள் நடந்தது. அஷ்டமி தினத்தையொட்டி, ஒவ்வொரு மாதமும், பல்வேறு சிவன் கோவில்களில் அமைந்துள்ள பைரவருக்கு, சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம். இதன்படி, அஷ்டமி தினமான நேற்று, திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவிலில் உள்ள கால பைரவருக்கு, சிறப்பு பூஜைகள் நடந்தது. பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, கால பைரவருக்கு, அபிஷேகங்கள் செய்து, சுவாமி தரிசனம் செய்தனர்.