தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரமோற்சவ விழா துவக்கம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், ஆனி பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
சூரியன் வடக்கிலிருந்து, தெற்கு நோக்கி நகரும் காலமான, தட்சணாயன புண்ணிய காலம் என அழைக்கப்படும், ஆனி பிரமோற்சவ விழா, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கொடியேற்றத்துடன் துவங்கியது. அதிகாலை, 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர் மற்றும் உண்ணாமுலையம்மன், உற்சவ மூர்த்தி மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, அருணாசலேஸ்வரர் சமேத உண்ணாமுலையம்மன், மற்றும் பராசக்தியம்மன் கோவில், தங்கக்கொடி மரத்தின் முன், எழுந்தருளினர். பின், சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க நடந்த கொடியேற்றத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அண்ணாமலையாருக்கு, ‘அரோகரா’ என பக்தி பரவசத்துடன் கோஷமிட்டனர். தொடர்ந்து, பத்து நாட்களுக்கு, சுவாமிகளுக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்கார, ஆராதனையும், விநாயகர் மற்றும் சந்திரசேகரர் மாடவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.