சமஸ்டி உபநயனம்
ADDED :2645 days ago
மதுரை, பிராமணர் இளைஞர் சங்கம் சார்பில் திருச்சி ஸ்ரீரங்கம்சிருங்கேரி ஸ்ரீவித்யா பாரதி பவனத்தில் 34 வது சமஷ்டி உபநயனம் நடந்தது. பெங்களூரு, சென்னை, அருப்புக்கோட்டை, திருநெல்வேலி உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பிராமணர் குடும்பத்தினர் பங்கேற்றனர். குழந்தைகளுக்கு உபநயனம், பிரம்மஉபதேசம் செய்து வைக்கப்பட்டது. ஏற்பாடுகளை வெங்கட்ராமன், சீத்தாராமன், கண்ணன், ராதாகிருஷ்ணன், சேகர், கிருஷ்ணமூர்த்தி அடங்கிய விழா குழுவினர் செய்திருந்தனர்.