உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு சிறப்பு பூஜை

தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு சிறப்பு பூஜை

குளித்தலை:விராச்சிலை ஈஸ்வரன் கோவில், பைரவர் சன்னதியில், தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நேற்று நடந்தது. குளித்தலை அடுத்த, ஆர்.டி., மலையில் உள்ள விராச்சிலை ஈஸ்வரன் கோவிலில் உள்ள பைரவர் சன்னதியில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, சுவாமிக்கு, பால், சந்தனம், பன்னீர், இளநீர், பழங்கள் உட்பட, 16 வகை திரவியங்களால் சிறப்பு அர்ச்சனை, அபிஷேகம் நடந்தது. இதில், ஆர்.டி.மலை, புழுதேரி, ஆர்ச்சம்பட்டி, வடசேரி, ஆலத்துார் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !