உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் பகவதியம்மன் கோவில் தீர்த்தக்குட ஊர்வலம்

மாரியம்மன் பகவதியம்மன் கோவில் தீர்த்தக்குட ஊர்வலம்

கிருஷ்ணராயபுரம்:லாலாப்பேட்டை அடுத்த, கள்ளப்பள்ளி தெற்கு கிராமத்தில், மாரியம்மன், பகவதியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, காவிரி ஆற்றில் இருந்து, பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலம் வந்தனர். கிருஷ்ணராயபுரம் அடுத்த, கள்ளப்பள்ளி தெற்கு கிராமத்தில் மாரியம்மன், பகவதியம்மன் சுவாமி கோவில் உள்ளது. இக் கோவில் திருவிழா முன்னிட்டு, நேற்று காலை, லாலாப்பேட்டை காவிரி ஆற்றில் இருந்து, ஏராளமான பக்தர்கள் தீர்த்தக் குடம் எடுத்து ஊர்வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, இரவு கரகம் பாலித்தல் நடந்தது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !