சத்குருவின் ஆசியுரை
(நாடி நூலில் நவின்ற வாழ்த்துரை)
மாணிக்கச் செல்வி மதுரையம்பதி திருப்பாதம் போற்றி
மகன் தானும் ராசமாதங்கி மதுரையமுதுயென
மங்கல நிகழ்வுகளை மாண்புற கொண்ட மகத்துவ நன்னூல்
மனத்தகத்தே மாசுகளை விலக்கி மாசற்ற பிறவி எய்தும்
எய்திய அரசன் அறுபானான்கு விளையாடல் பற்றியே
அரும் உப பிரிவாய் மூல மந்திரங்கள்அன்னை தம் கோட்ட
அனைத்து நிலை ஆகமவழி நிலை அதன் உட்பொருட்கள்
அய்ந்தெழுத்து ஆறாதார சூட்சம ஆருமறிய தெளிய
தெள்ளிய ஆயிரத் தெட்டு அண்டங்களுமே அன்னை சக்திபீடங்களை
அதிலோர் பீடம் பற்றி அறிய வைத்தான இந்நூல் தனில்
அகவைமுது நிலையில் அரும் மாந்தர் ஆன்மநிலை உய்வடைய
ஆன்ம சுவடிதனை அகம் சிறக்க என் மனம் குளிர அமைத்தானே
அமைத்தான் நற்றமிழில் வாழும் வகைதனை உணர்த்திய
வழிவழியாய் வந்த திருக்கூட்ட மரபினன் நல் சீடனாவான்
கயற்கண்ணி கயிலாசபதிதன் காலச்சுவடு காட்டும் இந்நூலும்
கொண்டதொரு கிருட்டிணனும் வரலாற்றில் விண்மீனாய்
விளங்குவான் தாமே