சீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் :ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
ADDED :2643 days ago
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரியில் நடந்த, சீனிவாச பெருமாள் திருக்கல்யாணத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.கிருஷ்ணகிரி பழையபேட்டை ராமஆஞ்சநேய ஸேவா ஸமிதி ட்ரஸ்ட் சார்பில், நரசிம்ம சுவாமி கோவில் அருகே, சீனிவாச திருக்கல்யாண விழா, கடந்த, 7ல் காலை, 7:00 மணிக்கு, கோ பூஜையுடன் துவங்கியது. 8ல், காலை, 6:00 மணிக்கு சுப்ரபாதமும், பிரஹதி ஸஹஸ்ரநாம யாகமும், 11:30 மணிக்கு பூர்ணாஹுதி நடந்தது.மாலை, 4:00 மணிக்கு, ஓசூர் கிருஷ்ணமூர்த்தி பாகவதர் குழுவினரால், ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. சிறப்பு யாகம், சொற்பொழிவு, சுவாமி பஜனைப் பாடல்கள், கோலாட்டம் ஆகியவை நடந்தது. கலெக்டர் கதிரவன், டி.எஸ்.பி., கண்ணன் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.