செங்குந்தர் மாரியம்மன் கோவிலில் முகூர்த்தக்கால் நடல்
ADDED :2744 days ago
சேலம்: சேலம், அம்மாபேட்டை, செங்குந்தர் மாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா, வரும், 17ல் தொடங்கி, ஆக., 16 வரை நடக்கிறது. இதை முன்னிட்டு, நேற்று காலை, முகூர்த்தக்கால் நடப்பட்டது. முன்னதாக, செங்குந்தர் மாரியம்மன், முருகன், விநாயகர் சுவாமிகளுக்கு, சிறப்பு பூஜை, அபி?ஷக ஆராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.