திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.45 லட்சம் வருமானம்
ADDED :2744 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான மனைகள், கடைகள் மூலம் வாடகையாக கடந்தாண்டு 45 லட்சம் ரூபாய் வசூலானது. 32 ஆண்டுகளில் இல்லாதளவு கடந்தாண்டு வாடகை வசூலானது. கோயில் இடங்கள் திருப்பரங்குன்றம் கோடாங்கி தோப்புத் தெரு, முள்ளாகுளம், நிலையூர் பிரிவு, விஸ்வகர்மாநகர், சங்கரலிங்க சுவாமிகள் தோட்டம், வண்டியூரில் உள்ளன. இவற்றில் மனை வாடகை மற்றும் கோயில் ஆஸ்தான மண்டபத்திலுள்ள 27 கடைகளுக்கும் வாடகை கோயில் நிர்வாகம் வசூலிக்கிறது. நிலுவைத்தொகையும் ஏராளமாக இருந்தது. கோயில் பணியாளர்களின் செயல்பாடுகளால் கடந்தாண்டு வாடகை வருவாய் அதிகரித்துள்ளது.