உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

கிருஷ்ணராயபுரம்: கோவக்குளம் காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த, கோவக்குளத்தில், காமாட்சியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், மூக்குத்தி அம்மன், பெரியசாமி, மருதைவீரன், மாயவன் உள்ளிட்ட சுவாமிக்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக, நேற்று முன்தினம் காலை, காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தக் குடம் எடுத்து வந்தனர். நேற்று காலை, 7:00 மணியவளவில், கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. இதில், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !