உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேத்தூர் அய்யனார் கோயிலில் ஆனி முப்பழம் அபிஷேக விழா

சேத்தூர் அய்யனார் கோயிலில் ஆனி முப்பழம் அபிஷேக விழா

சேத்தூர்: சேத்தூர் ஆதிபுத்திரங்கொண்ட அய்யனார் சுவாமி கோயிலில் ஆனி மாத முப்பழம் அபிஷேக விழா நடந்தது.

இவ்விழா, திருவிளக்கு பூஜையுடன் துவங்கியது. இரவு இன்னிசைகச்சேரி நடந்தது.
காலை முதல் மூலவர் உட்பட அனைத்து தெய்வங்களுக்கும் பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் கோயில் முன்பு பொங்கல் வைத்து முடிக்காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மாலை விளையாட்டு போட்டி, இரவு கலைநிகழ்ச்சி, மூலவர் உட்படஅனைத்து தெய்வங்களுககு பால், நெய் தயிர்மற்றும் முப்பழம் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. ஏற்பாடு களை விழாக்குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !