தேவதானப்பட்டி பத்ரகாளியம்மன் கோயிலில் கலசாபிஷேகம்
ADDED :2646 days ago
தேவதானப்பட்டி: வைகை அணை வரதராஜ் நகர், ராஜ்ஸ்ரீ சர்க்கரை ஆலை வளாக பத்ரகாளி யம்மன் கோயில், விநாயகர் கோயில் கலசாபிஷேகம் நடந்தது.
முதல் நாள் கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், தீபாராதனை, பகவதி சேவை, அத்தாழ பூஜை, குருதி பூஜை நடந்து பிரசாதம் வழங்கப்பட்டது.
இரண்டாம் நாள் கணபதி ஹோமம், காயத்ரி ஹோமம், பிரம்ம கலச பூஜை, நவக்கிரஹ பூஜை, பால் அபிஷேகம், பிரம்ம கலசாபிஷேகம் நடந்தது ராஜ் ஸ்ரீ சர்க்கரை ஆலை சார்பில்
அன்னதானம் வழங்கப்பட்டது.
ராஜ்ஸ்ரீ குழும சேர்மன் ராஜ்ஸ்ரீபதி, செயல் இயக்குனர் ஐஸ்வரியாபதி, ராஜ்ஸ்ரீசர்க்கரை ஆலை குழுமத் தலைவர் சத்தியமூர்த்தி, பொதுமேலாளர் மோகன் குமார், ஆலோசகர் கிருஷ்ணசாமி, கமிட்டி உறுப்பினர்கள் மனோகரன், செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.