சக்தி விநாயகர் கோவிலில் நமசிவாய மந்திரம் பாராயணம்
ADDED :2743 days ago
உடுமலை: உடுமலை, சக்தி விநாயகர் கோவிலில்,பக்தர்களால், ஒரு கோடியே, எட்டு லட்சம் முறை நமசிவாய மந்திரம் பாராயணம்செய்யப்பட்டது. உடுமலை முத்தையா பிள்ளை லே அவுட் சக்தி விநாயகர் கோவிலில், திருமுறை மற்றும் சைவசித்தாந்த பயிற்சி பட்டறை நேற்று துவங்கியது. அதில், பக்தர்கள் சார்பில், ஒரு கோடியே, எட்டு லட்சம் முறை நமசிவாய மந்திரம் பாராயணம் செய்யப்பட்டது.நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள், திருவாசகம் முற்றோதல் குழுவினர் பங்கேற்றனர். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிேஷகங்களும், பூஜைகளும் மேற்கொள்ளப்பட்டன.பக்தர்களுக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இரண்டு நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சியில், மாணிக்கவாசகர்,சுந்தரமூர்த்தி நாயனாருக்கு இன்றுஆராதனை விழா நடக்கிறது.