கோட்டை அழகிரிநாதர் கோவிலில் ஆஞ்சநேய பஜனை குழு ஆண்டு விழா
ADDED :2640 days ago
சேலம்: சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலில், ஆஞ்சநேய சுவாமி பஜனைக்குழுவின், 35ம் ஆண்டு விழா, நேற்று நடந்தது. அதை முன்னிட்டு, மூலவர் பெருமாள், தாயார் மற்றும் 10 அடி உயர ஆஞ்சநேயருக்கு, பால், தயிர், சந்தனம், குங்குமம் உள்ளிட்டவைகளால், சிறப்பு அபி?ஷகம் செய்து, விசேஷ அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஜானகி நடனக்குழுவினரின் பரத நாட்டியம், பஜனை குழுவினரின் இன்னிசை கச்சேரி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மதியம், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.