பழநி, ரோப்கார் பராமரிப்பு தீவிரம்
ADDED :2689 days ago
பழநி : பழநி முருகன் கோவில், ரோப்கார் பராமரிப்பு பணியில், புதிதாக கம்பி வடம் பொருத்துவதற்கான பணிகள் நடக்கின்றன. பழநி மலைக் கோவிலுக்கு, மூன்று நிமிடங்களில் எளிதாக செல்லவும், அதே வேகத்தில், கீழே வரும் வகையிலும் தினமும், ரோப்கார் இயக்கப்படுகிறது. இதை, பராமரிப்பு பணிகளுக்காக, மாதத்தில் ஒரு நாளும், ஆண்டுக்கு ஒரு மாதமும் நிறுத்துவது வழக்கம். இவ்வாண்டு, பராமரிப்பு பணிகளை, 40 நாட்களில் முடிக்க திட்டமிட்டுள்ளனர். தற்போது, மேல்தளம், கீழ்தளத்தில் பற்சக்கரங்கள், உருளைகளை கழற்றும் பணி நடக்கிறது. விரைவில் புதிய கம்பிவடம் பொருத்தப்பட உள்ளது. இதேபோல, தேய்மானம் அடைந்த பாகங்களை மாற்றி, பெட்டிகள் புதுப்பிக்கப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.