ஆடி பழமொழிகள்!
ADDED :2751 days ago
ஆடி மாதப் பழமொழிகள் பல. ‘ஆடிப் பட்டம் தேடி விதை’, ‘ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை வரும்’, ‘ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்’, ‘ஆடிச் செவ்வாய் தேடிக் குளி அரைத்த மஞ்சள் பூசிக் குளி’, ‘ஆடிக் கூழ் அமிர்தமாகும்.’ என்பன ஆடி குறித்த பழமொழிகளாக மக்கள் மத்தியில் வழங்கப்படுகின்றன.