வீட்டிலேயும் உபசரிக்கலாம்!
ADDED :2682 days ago
கடவுள் வழிபாட்டை ‘ஆராதனை’ என்றும் சொல்வர். ‘ஆராதனை’ என்றால் ‘கடவுள் மகிழ்ச்சி கொள்ளும் விதத்தில் செயலாற்றுவது’. கோயில்களில் ஆகம விதிகளின் அடிப்படையில், 16 வித முறைகளில் கடவுளை வழிபடுவதை ‘சோடஷ உபசாரம்’ என்பர். வீட்டு பூஜையில் இவ்வாறு செய்வது சிரமம். எனவே, எளியமுறையில் ‘பஞ்சோபசாரம்’ செய்யலாம். அதாவது ஐந்து வகை உபசாரங்கள்.
*வீட்டிலுள்ள விக்ரஹம் அல்லது படத்தின் முன் அமர்ந்து, சந்தனத்தைக் கரைத்து சுவாமியின் முடி முதல் அடிவரைசந்தனத்தால் திலகமிடுதல்.
*இறைவனின் திருநாமங்களைச் சொல்லி மலர்களால் அர்ச்சனை செய்தல்.அது 108 போற்றியாக இருப்பது நல்லது.
*சாம்பிராணி இட்டு சுவாமிக்கு துõபம்காட்டுதல்.
*நைவேத்யம் படைத்தல்
*தரமான கற்பூரம் அல்லது நெய்விளக்கால் தீபாராதனை செய்தல்.