விஜயகாந்த் நலம்பெற தன்வந்திரி ஹோமம்
ADDED :2754 days ago
சேலம்: அமெரிக்காவுக்கு, மேல் சிகிச்சைக்கு சென்ற, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நலம் பெற, சேலம், ஐந்துரோடு, தட்டாங்குட்டை மாரியம்மன் கோவிலில், திருநங்கையர் சார்பில், நேற்று, சிறப்பு அபி?ஷகம் நடந்தது. தொடர்ந்து, தன்வந்திரி ?ஹாமம், ஆயுள்விருத்தி ?ஹாமம், லட்சார்ச்சனை நடந்தது. திருநங்கை ராதிகா தலைமையில் நடந்த சிறப்பு வழிபாட்டில், மாநகர செயலர் ராதாகிருஷ்ணன், அவைத்தலைவர் மோகன்ராஜ், புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் உள்பட பலர் பங்கேற்றனர்.