விரத நாளில் இரவில் சாப்பாடு சாப்பிடலாமா?
ADDED :2687 days ago
ஒருவேளை மட்டும் சாப்பிட வேண்டும். காலையும் மாலையும் சாப்பிடாமல் இருப்பது நல்லது. இயலாவிட்டால், காலையும் இரவும் பழங்கள் சாப்பிடலாம். சிலர் இதற்காக ‘டிபன்’ சாப்பிடவும் செய்வர். டிபன் சாப்பிடும் வழக்கம் எப்படி வந்தது என்பதை வேடிக்கையாக சொல்வதுண்டு. விரதத்தன்று காலை, இரவில் ‘பல் ஆகார்’(பழ உணவு) சாப்பிடலாம் என்பதே ‘பலகாரம்’ என்று மாறி இறுதியில் இட்லி, தோசையாகி விட்டது என்பார்கள்.