நினைத்தது நிறைவேற்றும் மதுரை விபூதி விநாயகர்!
ADDED :2750 days ago
விநாயகரின் பலவிதமான வடிவங்களில் விபூதி விநாயகரும் இவர். மதுரை மீனாட்சியம்மன் கோயில் பொற்றாமரை குளக்கரையில் கன்னிமூலையான தென்மேற்கில் இவர் வீற்றிருக்கிறார். பக்தர்கள் தங்கள் கைகளாலேயே திருநீறு அபிஷேகம் செய்து இவரை வழிபடுவது சிறப்பு. மகம், உத்திரம், விசாகம், கேட்டை, பூராடம் நட்சத்திர நாட்களில் இவருக்கு திருநீற்றால் அபிஷேகம் செய்ய, எண்ணிய எண்ணம் விரைவில் நிறைவேறும் என்பது ஐதீகம்.