அய்யன்குளம் கணபதி கோயிலில் பிப்.2ம் தேதி கும்பாபிஷேகம்!
முக்கூடல்:பாப்பாக்குடி புதுக்கிராமம் அய்யன்குளம் மகாகணபதி கோயிலில் வரும் 2ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.புதூர் கிராமம் அய்யன்குளக்கரையில் சுமார் 200 ஆண்டுகள் பழமையும், பெருமையும் வாய்ந்த மகா கணபதி கோவில் உள்ளது. இந்த கோயிலில் திருப்பணிகள் நடத்தி, கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் திருப்பணிகள் நடந்தன. திருப்பணியை தொடர்ந்து வரும் பிப்ரவரி 2ம் தேதி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதுகுறித்து திருப்பணிகளை நடத்தி வரும் சஞ்சீவி தர்மராஜய்யர், பரம்பரை அறங்காவலர் லட்சுமி அம்மாள் கூறுகையில், ""பல ஆண்டுகளுக்குப்பின் இந்த கோயில் முழுவதும் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. இந்த அயன்குளத்தை சீரமைத்து, குளத்தின் மத்தியில் மண்டபம் கட்டப்படும். இந்த இடம் முழுவதும் சீரமைக்கப்பட்டு தினமும் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என தெரிவித்தனர். கும்பாபிஷேகத்தை வடக்கு அரியநாயகிபுரம் முருகானந்த சிவம் நடத்தி வைக்கிறார்.