புகையிலை விடு தூது..
ADDED :2680 days ago
கிராமிய தெய்வங்களுக்குப் படையலிடும்போது, புகையிலை சுருட்டு நிவேதனமாகப் படைக்கும் வழக்கம் சில பகுதிகளில் உண்டு. விராலிமலை முருகனுக்குச் சுருட்டு சமர்ப்பணம் உண்டு என்பார்கள். புலவர் ஒருவர், புகையிலையை பழநியாண்டவரிடம் தூது போகும்படிப் பாடியிருக்கிறார். அதற்கு, ‘புகையிலை விடு தூது’ என்று பெயர். அதை, தமிழ் தாத்தா உ.வே.சா. அவர்கள் பதிப்பித்திருக்கிறார். புகையிலையின் பெருமைகளை அந்தச் சிறு நூல் அழகாக சொல்கிறது.