தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் நோய்கள் தீர்க்க சிறப்பு ஹோமம்
ADDED :2648 days ago
வாலாஜாபேட்டை: வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், கொடிய நோய்களை தீர்க்க, 17 கலசங்கள் வைத்து, மகா தன்வந்திரி கோடி, ஜப ?ஹாமம், நேற்று துவங்கியது. தென்னிந்திய புரோகிதர் சங்க தலைவர் சீதாராமன் துவக்கி வைத்தார். இதையொட்டி, கோ பூஜை, கலச பூஜை, மகா கணபதி ?ஹாமம், விநாயகர், தன்வந்திரி, நவ கலச திருமஞ்சனம் நடந்தது. இதுகுறித்து, முரளிதர சுவாமிகள் கூறியதாவது: வரும் அக்., 28 வரை, 100 நாள் நடக்கும் இந்த ?ஹாமத்தில் பங்கேற்பவர்களுக்கு, நாட்பட்ட நோய்கள் நீங்கும். இவ்வாறு, அவர் கூறினார். ?ஹாமத்தில் பங்கேற்றவர்களுக்கு, நோய்கள் தீர்க்கும் மூலிகை மருந்து பிரசாதமாக வழங்கப்பட்டது.