உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 63 நாயன்மார்கள் விழா: ராசிபுரத்தில் இன்று துவக்கம்

63 நாயன்மார்கள் விழா: ராசிபுரத்தில் இன்று துவக்கம்

நாமக்கல்: ராசிபுரம், கைலாசநாதர் கோவிலில், அறுபத்து மூவர் விழா இன்று துவங்குகிறது. ராசிபுரம், கைலாசநாதர் கோவிலில், 15ம் ஆண்டு, 63 நாயன்மார்கள் விழா இன்று துவங்குகிறது. இதை முன்னிட்டு, பொன்னர் சங்கர் திருமண மண்டபத்தில், காலை, 7:00 மணிக்கு சமயம் மற்றும் சிவ தீட்சை வழங்கும் விழா, கைலாசநாதர் கோவிலில் விநாயகர், முருகர், நந்தியம் பெருமான் மற்றும் உள்சுற்று, வெளிச்சுற்று பிரகார தெய்வங்களுக்கு சிறப்பு அபி ?ஷகம், 3:00 மணிக்கு கைலாசநாதர், அறம் வளர்த்த நாயகியம்மன் மற்றும் 63 நாயன்மார்களுக்கும் அபி?ஷகம், அலங்காரம், சிவ வாத்தியங்களுடன் திருமுறை பாராயணம் நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு, கரூர் அரசு இசைப்பள்ளி தேவார ஆசிரியர் சாமிநாதர் தேசிகரின் திருமுறை இசை நிகழ்ச்சி நடக்கிறது. நாளை காலை, 8:00 மணிக்கு கோவிலில் இருந்து, பன்னிரு திருமுறை ஊர்வலமாக, வாசவி மஹால் திருமண மண்டபத்திற்கு சென்றடைகிறது. அங்கு, காலை, 8:30 மணிக்கு ஆன்மிகவாதிகள் பங்கேற்கும் சிறப்பு சொற்பொழிவு நடக்கிறது. மாலை, 5:30 மணிக்கு கயிலாய வாத்தியங்கள் முழங்க ஐம்பெரும் மூர்த்திகள், அறுபத்தி மூவர் வீதி உலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !