இந்து அன்னையர் முன்னணி சார்பில் மாரியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா
ADDED :2670 days ago
ஈரோடு: ஆடி வெள்ளியை முன்னிட்டு, ஈரோடு பெரிய மாரியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. ஈரோடு இந்து அன்னையர் முன்னணி சார்பில், ஆண்டு தோறும் ஆடி முதல் வெள்ளியன்று, ஈரோடு பெரிய மாரியம்மன் மூலவருக்கு, மஞ்சள் நீராட்டு நடத்தப்படுகிறது. மூன்றாவது ஆண்டு விழா, நேற்று கோலாகலமாக நடந்தது. ஈரோடு ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் பூசப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். முன்னதாக இடையன்காட்டு வலசு ராஜகணபதி கோவிலில் இருந்து, மஞ்சள் நீர் நிரப்பிய குடங்களை, மேளதாளத்துடன் ஊர்வலமாக, பெண்கள் எடுத்து வந்தனர்.