ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் 108 பால்குட அபிஷேகம்
ADDED :2671 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், ஆடி முதல் வெள்ளி கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தது. துர்கையம்மனுக்கு பெண்கள் பால்குடம் எடுத்து வந்தனர். துர்கையம்மன் கலசம் ஆவாகன பூஜைகள் செய்தனர். அதனைத் தொடர்ந்து கலசாபிஷேகத்திற்கு பின், 108 பால்குட அபிஷேகம் நடந்தது.