உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நடுவீரப்பட்டு முத்து மாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா

நடுவீரப்பட்டு முத்து மாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு முத்து மாரியம்மன் கோவிலில் வரும் 27 ம் தேதி செடல் திருவிழா நடக்கிறது. அதனையொட்டி கடந்த 19 ம் தேதி காலை சக்தி கரகம் எடுத்து வந்து கொடியேற்றப்பட்டது. அன்று முதல் தினமும் அம்மன் வீதி உலா நடந்து வருகிறது. நாளை 24ம் தேதி சாகை வார்த்தலும், 26ம் தேதி காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்து, அம்மன் பட்டு சாத்தும் நிகழ்வுக்காக வீதி உலா நடக்கிறது. இரவு 10:00 மணிக்கு முத்துபல்லக்கில் அம்மன் வீதி உலா நடக்கிறது. 27ம் தேதி காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் செடல் திருவிழா நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு திருத்தேரில் அம்மன் வீதியுலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !