உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமலிங்கேஸ்வரர் கோவிலில் விளக்கு பூஜை : பெண்கள் வழிபாடு

ராமலிங்கேஸ்வரர் கோவிலில் விளக்கு பூஜை : பெண்கள் வழிபாடு

திம்மராஜம்பேட்டை: பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவிலில், 12ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடந்தது. வாலாஜாபாத் அடுத்த, திம்மராஜம்பேட்டை கிராமத்தில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், 12ம் ஆண்டு விளக்கு பூஜை, நேற்று நடந்தது. இதையொட்டி, நேற்று மாலை சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. தொடர்ந்து, சுமங்கலி பெண்கள், பூஜையில் விளக்கு ஏற்றி, அம்மனை வழிபட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !