உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவியருடன் ராஜ அலங்காரத்தில் கோட்டை பெருமாள்

தேவியருடன் ராஜ அலங்காரத்தில் கோட்டை பெருமாள்

சேலம்: கோட்டை அழகிரிநாதர், ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார். சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலில், நேற்று முன்தினம் முதல், ஆடி ஏகாதசி விழா கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு, நேற்று காலை, 5:30 மணிக்கு, அதிகாலை பூஜை, சிறப்பு அபி?ஷகம் நடந்தது. தொடர்ந்து, அழகிரிநாதர், ஸ்ரீதேவி, பூதேவியுடன், ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதேபோல், அங்குள்ள ஆஞ்சநேயருக்கு, சிறப்பு அபி ?ஷகம் செய்து, வெற்றிலை மாலை சாத்துபடி செய்யப்பட்டது. ஏராளமானோர், சுவாமியை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !