பண்டரிநாதன் கோவிலில் ஆஷாட ஏகாதசி திருவிழா: லட்சார்ச்சனையுடன் துவக்கம்
                              ADDED :2657 days ago 
                            
                          
                          கரூர்: கரூர் பண்டரிநாதன் கோவிலில், ஆஷாட ஏகாதசி திருவிழா நேற்று துவங்கியது. கரூர் ஜவஹர் பஜார் அருகே உள்ள, பிரசித்தி பெற்ற பண்டரிநாதன் கோவிலில், ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வரும் ஆஷாட ஏகாதசியன்று, கருவறைக்குள் சென்று மூலவர் சுவாமியை பக்தர்கள் தொட்டு வணங்க அனுமதிக்கப்படுகின்றனர். அதன்படி, நடப்பாண்டில் இன்று, ஆஷாட ஏகாதசி நாள் வருவதால், நேற்று காலை, 6:00 மணிக்கு, துக்காரம் என்ற கொடி புறப்பாடு நடந்தது. அதைத் தொடர்ந்து, பண்டரிநாதனுக்கு லட்சார்ச்சனை நடந்தது. இன்று காலை, 7:00 மணி முதல் நடக்கவுள்ள விழாவில், பக்தர்கள் கருவறைக்குச் சென்று, சுவாமி பண்டரிநாதன் மூலவரை தொட்டு வணங்கலாம் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.