உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி செவ்வாய்: அம்மன் கோயிலில் குவிந்த பெண்கள்

ஆடி செவ்வாய்: அம்மன் கோயிலில் குவிந்த பெண்கள்

மதுரை: ஆடி செவ்வாய் கிழமையை முன்னிட்டு தேனி மேலப்பேட்டை பத்ரகாளியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

 ஆடி மாதத்தில் செவ்வாய், வெள்ளிக் கிழமைகள் விஷேமானது என்பதால் அம்பாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதுவும் பெண்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். இன்று ஆடி செவ்வாயை முன்னிட்டு அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.  தேனி மேலப்பேட்டை பத்ரகாளியம்மன் கோயிலில் நடைபெற்ற வழிபாட்டில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நெல்லை, மதுரை என அனைத்து அம்மன் கோயில்களிலும் ஆடிச் செவ்வாய் கிழமையை முன்னிட்டு, காலை சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !