உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்தூர் முத்துமாரியம்மன் கோயில் ஆடிவிழா

திருப்புத்தூர் முத்துமாரியம்மன் கோயில் ஆடிவிழா

திருப்புத்தூர்: திருப்புத்துார் நான்கு ரோடு முத்துமாரியம்மன் கோயிலில் ஆடிவிழாவை முன்னிட்டு பெண்கள் மழை வேண்டி முளைப்பாரி எடுத்து வழிபட்டனர். இக்கோயிலில் ஜூலை24ல் காப்புக் கட்டி ஆடிவிழா துவங்கியது. தினசரி அம்மன் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. முளைப்பாரித் தினத்தன்று இரவு பெண்கள் தங்கள் வளர்த்த பாரிகள் அனைத்தையும் கோயிலுக்கு கொண்டு வந்தனர். பின்னர் பெண்கள் கும்மியடித்து அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து நேற்று பாரிகளை எடுத்து திருத்தளிநாதர் கோயிலிலிருந்து புறப்பாடாகி கருப்பர் கோயில், பூமாயி அம்மன் கோயில், அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில்கள் வழியாக ஊர்வலமாக வந்து சீதளிகுளத்தில்கரைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !