உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரி மலையில் பூஜை நேரம் மாற்றம்

சதுரகிரி மலையில் பூஜை நேரம் மாற்றம்

வத்திராயிருப்பு:  சதுரகிரி மலையில் இரவில் நடக்கும் பவுர்ணமி பூஜைகள், சந்திரகிரகணத்திற்காக பகலில் மாற்றப்பட்டுள்ளது.சதுரகிரி மலை சுந்தரமகாலிங்க, சந்தனமகாலிங்க சுவாமி கோயிலில் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு மாலை 6:00மணிக்கு துவங்கி அதிகாலை சாஷ்டாங்க பூஜைகளுடன் விழா நடக்கும்.ஆடி பவுர்ணமி விழா நாளை (ஜூலை 27) இரவு நடக்க வேண்டும். சந்திர கிரகணம் என்பதால் பூஜைகள் மாற்றப்பட்டுள்ளன. அன்று காலை 6:00 மணி முதல் மாலை 6:00 வரை நடை திறக்கப்பட்டிருக்கும். பின் நடை சாத்தப்பட்டு மறுநாள் காலையில் திறக்கப்படும். பூஜைகளுக்கு ஏற்ப வருமாறு பக்தர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !