அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் நாளை தேரோட்டம்
ADDED :2630 days ago
அலங்காநல்லுார்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஆடிப்பெருவிழாவையொட்டி நாளை (ஜூலை 27) தேரோட்டம் நடக்கிறது.நிர்வாக அதிகாரி மாரிமுத்து கூறியதாவது: நாளை வெள்ளிக்கிழமை இரவு பூரண சந்திரகிரகணம் ஏற்படுகிறது. கள்ளழகர் கோயில், ராக்காயி அம்மன் கோயில், தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி, வண்டியூர் வீரராகவபெருமாள், மேலூர் ஆஞ்சநேயர் கோயில்களில் இரவு 8:00 மணிக்குள் அனைத்து பூஜைகளும் முடிந்து நடை சாத்தப்படும். நாளை காலை 6:00 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் ஆடித்தேரோட்டம் நடக்கிறது. தேர் நிலைக்கு வந்தவுடன் வழக்கமான பூப்பல்லக்கு நிகழ்ச்சி சந்திர கிரகணத்தையொட்டி முன்னதாகவே மாலை 4:00 மணிக்கு நடக்கும். ஜூலை 28 சனி கிரகணம் முடிந்தவுடன் அதிகாலை 4:00 மணிக்கு 18ம் படி கருப்பணசாமிக்கு சந்தனம் சாத்துபடி நடக்கும், என்றார்.