கலச விளக்கு பூஜை
ADDED :2627 days ago
ராசிபுரம்: ராசிபுரம், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி, மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில், 26வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. தொடர்ந்து, மழை வேண்டி கலச விளக்கு பூஜை, யாகம் நடத்தப்பட்டது. இதில், 100க்கணக்கான பக்தர்கள் சிவப்பு நிற ஆடை அணிந்து கலந்து கொண்டனர். முடிவில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.