பழநியில் கவர்னர் சாமி தரிசனம்
ADDED :2626 days ago
திண்டுக்கல்:தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் 2 நாள் பயணமாக நேற்று திண்டுக்கல் வந்தார். மாலையில் அவர் பழநி சென்றார். அவருடன் அமைச்சர் சீனிவாசன், கலெக்டர் வினய், சப்.கலெக்டர் அருண்ராஜ் சென்றனர். கோயில் இணை கமிஷனர் செல்வராஜ் அவர்களை வரவேற்றார். ’வின்ச்’ மூலம் மலைக்கோயிலுக்கு கவர்னர் சென்றார். சாமி தரிசனம் செய்த கவர்னருக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் பஞ்சாமிர்தம் பிரசாதம் வழங்கப்பட்டது. பராமரிப்புக்காக ரோப்கார் நிறுத்தப்பட்டு இருந்தது. இதனால் வின்ச்சில் செல்ல பக்தர்கள் திரண்டு இருந்தனர். கவர்னருடன் வந்த அதிகாரிகள், போலீசார் 3 வின்ச்களில் சென்றதால் ஒரு மணிநேரம் பக்தர்களை படிப்பாதையில் செல்லும்படி கூறினர்.