உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு

சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு

திருநெல்வேலி, சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் இன்று, ஆடித்தபசு திருவிழா நடக்கிறது.திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலில் பிரசித்திபெற்ற சங்கர நாராயண சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடித்தபசு திருவிழா நடக்கிறது.இந்தாண்டு ஆடித்தபசு திருவிழா, 17 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.தினமும் கோமதி அம்பாள் காலை, மாலை என இருவேளையிலும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தார்., சிறப்பு பூஜைகள் நடந்தன. 25ம் தேதி தேரோட்டம் நடந்தது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித் தபசு திருவிழா இன்று மாலை, 5:00 மணிக்கு கோமதி அம்பாளுக்கு, சிவபெருமான் சங்கரநாராயணராக காட்சி தரும் முதல் காட்சியும், இரவு, 9:00 மணிக்கு சிவலிங்கமாக காட்சி தரும் இரண்டாம் காட்சியும் நடக்கிறது.ஆடித்தபசை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதையொட்டி, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !