உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்திர கிரகணம்: மதுரை மீனாட்சி கோயில் நடை அடைப்பு

சந்திர கிரகணம்: மதுரை மீனாட்சி கோயில் நடை அடைப்பு

மதுரை, மதுரை மீனாட்சி கோயிலில் சந்திரகிரஹணத்தை முன்னிட்டு இன்று (ஜூலை 27) மதியம் 12:30 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. மாலையும் நடை திறக்கப்பட மாட்டாது.இரவு 1:52 மணிக்கு மத்திம கால தீர்த்தம் கொடுக்கப்பட்டு சந்திரசேகரர் சுவாமி சன்னதி இரண்டாம் பிரகாரம் புறப்பாடு நடக்கும். நாளை (ஜூலை 28)அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு அர்த்த ஜாமம், பள்ளியறை பூஜை நடக்கும். பின்னர் காலை வழக்கம் போல் பூஜைகள் நடக்கும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !