உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குரு பவுர்ணமியை முன்னிட்டு சக்தி தெய்வங்களுக்கு காய்கறி அலங்காரம்

குரு பவுர்ணமியை முன்னிட்டு சக்தி தெய்வங்களுக்கு காய்கறி அலங்காரம்

கரூர்: குரு புவுர்ணமியை முன்னிட்டு 48 சக்தி தெய்வங்களுக்கு காய்கறி மற்றும் கனிகளால் அலங்காரம் செய்யப்பட்டது. கரூர், ஜவஹர் பஜாரிலுள்ள கன்னிகா பரமேஸ்வரி கோவிலில், லலிதா சங்கத்தின் சார்பில், 60ம் ஆண்டு குரு பவுர்ணமி விழா கொண்டாடப்பட்டது. கோவிலுள்ள கன்னிகாபரமேஸ்வரி, லலிதா பரமேஸ்வரி உள்ளிட்ட, 48 சக்தி தெய்வங்களுக்கு காய்கறி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பவுர்ணமியான இன்று, சந்திர கிரஹணம் வருவதால் குரு பவுர்ணமியாக நேற்று கொண்டாடப்பட்டது. இதில், உலக அமைதிக்காகவும், உடல் ஆரோக்கியத்திற்கும், செல்வங்கள் செழிப்பது உள்ளிட நன்மைகளுக்காக, சந்தனத்தால் சக்தி தெய்வங்கள் அமைக்கப்பட்டு வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, கேரட், கொத்தவரங்காய் உள்ளிட்ட காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டது. மாதுளை, ஆரஞ்சு, திராட்சை, ஆப்பிள், சாத்துக்குடி உள்ளிட்ட பழங்களாலும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !