உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருதுநகர் அம்மன் கோயிலில் ஆடி வெள்ளி, பவுர்ணமி வழிபாடு

விருதுநகர் அம்மன் கோயிலில் ஆடி வெள்ளி, பவுர்ணமி வழிபாடு

விருதுநகர்: விருதுநகர் பராசக்தி அம்மன், துள்ளுமாரியம்மன் கோயில், வெயிலுகந்தம்மன் கோயிலில் நேற்று ஆடி 2 ம் வெள்ளிகிழமையுடன் பவுர்ணமி பூஜை நடந்தது.
பெண் பக்தர்கள்  வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்தனர். நினைத்தது நிறைவேற அகல்விளக்கேறி வழிப்பட்டனர். நேர்த்தி கடனமாக பொங்கல் வைத்தும், அம்மனுக்கு எலுமிச்சை மாலை அணிவித்தும்  மனம் மகிழ்ந்தனர். எரிச்சநத்தம் ஆதிசக்தி அன்னை மாசாணி அம்மன் தியான பீடத்திலும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், அன்னதானமும் நடந்தது. உள்ளூர் மற்றும் வெளிமாவட்ட பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை தீயான பீட பொறுப்பாளர் ரங்கராஜா செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !